முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனி மாநில மொழிகளில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள்..! முதற்கட்டமாக 13 மொழிகளில் 1,268 தீர்ப்புகள் வெளியீடு

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2023      இந்தியா
supreme-courti 20221 01 04

சுப்ரீம் கோர்ட் தீா்ப்புகள் அனைத்தும் வியாழக்கிழமை (ஜன.26) முதல் இந்திய மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திர சூட் அறிவித்துள்ளார். முதற்கட்டமாக 13 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட 1,268 தீர்ப்புகள் வெளியிடப்படுகிறது.

மகாராஷ்ரம்-கோவை வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், சுப்ரீம் கோர்ட் தீா்ப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும். அதற்காக தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார். 

இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் வரவேற்று அறிக்கை வெளியிட்டிருந்ததுடன் உயா் நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்திருந்தனர். 

இந்நிலையில், குடியரசு நாளையொட்டி, வியாழக்கிழமை (ஜன.26) முதல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் இந்திய மாநில மொழிகளில் வெளியிடப்படும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திர சூட் அறிவித்துள்ளார். அதன்படி, சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மாநில மொழிகளில் வியாழக்கிழமை முதல் வழங்கப்படுகிறது. 

முதற்கட்டமாக 13 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட 1,268 தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகிறது. இதில், 52 தீர்ப்புகள் தமிழில் இடம் பெற்றுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து