முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது பிலிப்ஸ் நிறுவனம்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      உலகம்
Philips 2023 01 30

Source: provided

வாஷிங்டன் : பிலிப்ஸ் நிறுவனம் 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் பிலிப்ஸ் நிறுவனம் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அந்நிறுவன ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் 5% ஆகும். பொருளாதாரத்தை மீட்டெடுக்க 6,000 பணிகளை அகற்றுவதாக அறிவித்துள்ளது பிலிப்ஸ் நிறுவனம்.

டச்சு சுகாதார தொழில்நுட்ப நிறுவனமான பிலிப்ஸ், அதன் லாபத்தை அதாவது பொருளாதாரத்தை மீட்டெடுக்க 6,000 ஊழியகளை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. அந்நிறுவனம் சந்தை மதிப்பில் 70% வீழ்ச்சியடைந்த சுவாச சாதனங்களை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த 6,000 பணிகளில் பாதி வேலைகள் இந்த ஆண்டு குறைக்கப்படும், மற்ற பாதி 2025 க்குள் குறைக்கப்படும் எனவும் அந்நிறுவனம் என்று தெரிவித்துள்ளது. புதிய மறுசீரமைப்பு கடந்த அக்டோபரில் அதன் பணியாளர்களை 5% அல்லது 4,000 வேலைகளைக் குறைப்பதற்காக அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் வருவதாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து