முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு பகுதிகளில் திடீர் மழை: தஞ்சையில் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம் ரூ.25 ஆயிரம் வரை இழப்பீடு தர விவசாயிகள் கோரிக்கை

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      தமிழகம்
Agree 20221 02 02

Source: provided

தஞ்சை: பரவலாக பெய்த மழை காரணமாக தஞ்சாவூரில் அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் விலை நிலங்கள் வேரோடு சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஏக்கருக்கு 25 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் வேரோடு விளைநிலங்களில் சாய்ந்து உள்ளது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் அன்னப்பன்பேட்டை, திட்டை, மெலட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் ஒரிரு நாள்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அனைத்தும் மழை நீரில் சேதமடைந்து விளை நிலத்தில் சாய்ந்து உள்ளது. 

இதனால் ஏக்கருக்கு 25 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மழை தொடர்ந்தால் நெல்மணிகளை காப்பாற்ற முடியாமல் அழுகிவிடும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மழைவிட்டு அறுவடை செய்தாலும் பாதி நெல்மணிகள் இயந்திரத்தில் அடிபட்டு பாதிக்கப்படும் என்பதால் பாதிக்கு பாதி இழப்பு ஏற்படும் என விவசாயிகள் கூறியுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து