எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த மாதம் 12 ஆம் தேதி விபத்தில் சிக்கியது. இந்த விமான விபத்தில், விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்த நிலையில், விமானப் பணியாளர்கள் உள்பட 241 பேர் பலியாகினர். மேலும், விமானம் மோதிய மருத்துவக் கல்லூரிக் கட்டடம் மற்றும் குடிருப்புப் பகுதிகளில் இருந்த 19 பேர் பலியாகினர் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விமான விபத்து புலனாய்வுப் பணியகத்துக்கு மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், விமான விபத்து நடைபெற்று கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆக உள்ள நிலையில், தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் தனது அறிக்கையை நேற்று சமர்பித்துள்ளது. இந்த அறிக்கை விவரங்கள் விரைவில் பொது வெளியில் மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


