முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலக்கிய மலர் 2023 எனும் இதழை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2023      தமிழகம்
CM-1 2023 02 04

Source: provided

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இலக்கிய மலர் 2023 என்ற சிறப்பு மலரினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். 

அதன் முதல் பிரதியை தலைமைச் செயலாளர் இறையன்பு பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரதிகளை சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் புகழ்பெற்ற ஓவியர் டிராட்ஸ்கி மருது ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 

அறிஞர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், விமர்சகர்கள், ஓவியர்கள் போன்றவர்களின் எழுத்தும், இலக்கியமும், அவர்களின் ஓவியங்களும், கவிதைகளும், கட்டுரைகளும், சிறுகதைகளும் எவ்வாறு படைக்கப்பட்டது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக இலக்கிய மலர்  உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து