முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட்டில் 5 புதிய நீதிபதிகள் நியமனம் கொலிஜியம் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல்

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2023      இந்தியா
supreme-courti 20221 01 04

சுப்ரீம் கோர்ட்டில் 5 புதிய நீதிபதிகள் நியமனத்துக்கு கொலிஜியம் பரிந்துரைத்துள்ளதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 34 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது 27 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றுகின்றனர். 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில், ஐகோர்ட்டுகளில் தலைமை நீதிபதிகளாக பணியாற்றி வருகிற பங்கஜ் மித்தல் (ராஜஸ்தான்), சஞ்சய் கரோல் (பாட்னா), சஞ்சய் குமார் (மணிப்பூர்) மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் அசனுதீன் அமானுல்லா (பாட்னா), மனோஜ் மிஸ்ரா (அலகாபாத்) ஆகிய 5 பேரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. 

தொடர்ந்து, கடந்த மாதம் 31-ம்  தேதியன்று, அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டலையும், குஜராத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அரவிந்த் குமாரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. 

இந்த ஐந்து நீதிபதிகளின் நியமனம் குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். புதிய நீதிபதிகள் அடுத்த வாரம் பதவியேற்க உள்ளனர். அவர்கள் பதவியேற்றதும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயரும். 2 இடங்கள் மட்டுமே காலியாக இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து