முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேசன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு விரைவில் நீங்கும் : கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023      தமிழகம்
Radhakrishnan 2023 02 05

Source: provided

சென்னை : ரேசன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என்று கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

திருவொற்றியூர் தனியார் பள்ளியின் 19-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கூட்டுறவு துறையின் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது, 

குருவை சாகுபடி சம்பா உள்ளிட்ட 11.23 லட்சம் மெட்ரிக் டன் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். ரூ.11,618 கோடி கூட்டுறவு கடன்கள் இதுவரை விவசாயிகளுக்கு அரசு வழங்கி உள்ளது. 

4,800 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அரிசி கடத்தல் கணிசமாக குறைந்த நிலையிலும், மேலும் கட்டுப்படுத்த கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அரிசி கடத்தல் வழக்கில் 132 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். 

அதே சமயத்தில் பொதுமக்களும் இலவசமாக கொடுக்கும் அரசு அரிசியை விற்கக் கூடாது என்ற விழிப்புணர்வு வேண்டும். தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் ஒரு சில இடங்களில் கோதுமை தட்டுப்பாடு இருப்பது உண்மைதான். 10 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை கொள்முதல் செய்ய இந்திய உணவு கழகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்துள்ளனர். அவ்வாறு கோதுமை வந்து விட்டால் கோதுமை தட்டுப்பாடு விரைவில் நீங்கும் எனவும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து