Idhayam Matrimony

பான் எண்ணுடன் ஆதாரை இணைத்த 48 கோடி பேர் : மார்ச் 31-ம் தேதி கடைசி அவகாசம்

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      இந்தியா
pan-card 2023 02 01

Source: provided

புதுடெல்லி : நாட்டில் பான் என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கான அவகாசம் முடிந்து விட்ட நிலையில் தற்போது ரூ.1,000 கட்டணம் செலுத்தி இணைக்கிற நடைமுறை உள்ளது. 

இந்த நடைமுறையின் கீழ் மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்துவிட வேண்டும். அப்படி இந்த மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதாருடன் இணைக்கப்படாத தனிப்பட்ட பான் எண்கள் செயலிழக்கச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையொட்டி மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா கூறியதாவது:- 

நமது நாட்டில் இதுவரை 61 கோடி தனிநபர் பான் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 48 கோடி தனி நபர் பான் எண்களுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு விட்டன. விதிவிலக்கு பெற்ற பிரிவினர் உள்பட 13 கோடி பேர் இணைக்கவில்லை. விதிவிலக்கு பிரிவினர் தவிர்த்து அனைவரும் குறிப்பிட்ட தேதிக்குள் (மார்ச் 31-ம் தேதி) இணைத்துவிடுவார்கள் என்று நம்புகிறோம். (இணைக்காதவர்கள் மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் இணைத்து விட வேண்டும். இணைக்காதவர்கள் பல்வேறு வணிக நடவடிக்கைகளை, வரி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்கிற போது பலன் பெற மாட்டார்கள். பட்ஜெட்டில் அறிவித்தபடி பான் அட்டையை பொதுவான அடையாள அட்டையாக ஆக்குவதன் மூலம் தொழில் துறையினர் பலன் அடைய முடியும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து