முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பங்குனி மாத பூஜை: சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு

திங்கட்கிழமை, 13 மார்ச் 2023      ஆன்மிகம்
Sabarimala 2022 12 18

Source: provided

சபரிமலை : பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மார்ச் 14ஆம் தேதி திறக்கப்படுகிறது.

தொடர்ந்து மறுநாள் முதல் 15 ஆம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு சபரிமலை மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கோவில் கருவறையைத் திறந்து தீபம் ஏற்றி வைக்கிறார். அதைத்தொடர்ந்து நடை திறந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரரூ அபிஷேகம் நடத்தி, நெய்யபிஷேகத்தை துவக்கி வைக்கிறார். 

அதன்பின்னர், கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் துவங்கும். மார்ச் 19 வரை கோயில் நடை திறந்திருக்கும். அன்றைய தினம் இரவு 10 மணியளவில் கோயில் நடை அடைக்கப்படும். 

ஏப்ரல் மாதம் உத்திரத் திருவிழாவையொட்டி சபரிமலை கோயில் நடை மார்ச் 26-ஆம் தேதி திறக்கப்படும். தொடர்ந்து, மார்ச் 27-ஆம் தேதி கொடியேற்றம், ஏப். 5-ஆம் தேதி பங்குனி உத்திரம் ஆராட்டு நடைபெறவுள்ளதாக கோயில் மக்கள் தொடா்பு அலுவலா் சுனில் அருமானூா் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து