எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் ‘மிஸ் திருநங்கை’ பட்டத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி என்ற திருநங்கை பெற்றார்.
தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் ‘கூவாகம் திருவிழா - 2025’ விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் நேற்று முன்தினம் (மே 11) இரவு நடைபெற்றது. முன்னிஜி நாயக் தலைமை வகித்தார். முன்னாள் நகராட்சி சேர்மன் ஜனகராஜ் முன்னிலை வகித்தார். குத்துவிளக்கு ஏற்றி வைத்து ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, “ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விழாக்கள் சிறப்பாக நடைபெறும். அதேபோன்று ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் கூத்தாண்டவர் கோயில் திருவிழா நடைபெற்றது. மாவட்டம் பிரிந்த பிறகும், தொடர்ந்து நடைபெறுவது விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கிறது.
பிற மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்துள்ள திருநங்கையர்களை அன்புடன் வரவேற்கிறோம். மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்று கூத்தாண்டவர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வாழ்த்துகள்” என்றார். பின்னர் அவர், திருநங்கைகள் சார்பில் விழுப்புரம் நகராட்சி முன்னாள் சேர்மன் ஜனகராஜுக்கு ‘மக்கள் தொண்டன்’ என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தார். இதையடுத்து, திருநங்கைகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


