Idhayam Matrimony

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறியும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 12 மே 2025      தமிழகம்
Ma Sup 2023 05 12

Source: provided

திருவள்ளூர் : திருப்பாச்சூர் துணை சுகாதாரம் நிலையத்தில் சமுதாய அளவிலான புற்று நோய் கண்டறியும் திட்ட விரிவாக்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் துணை சுகாதாரம் நிலையத்தில், மாநில அளவில் 12 மாவட்டங்களில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா நேற்று  (மே 12) காலை நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சமுதாய அளவிலான புற்று நோய் கண்டறியும் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அவர் நோயாளிகளிடம் நோய் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தற்போதைய நிலையில் பொதுமக்களிடையே புற்றுநோய் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் ரூ.27 கோடி ஒதுக்கீடு செய்து மாநில அளவில் கருர், திருப்பூர், வேலூர், தேனி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வாய்ப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய்களை கண்டறியும் திட்ட விரிவாக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஆரம்பத்திலேயே புற்றுநோயை கண்டறிந்து தடுக்கும் வகையில் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு ஒவ்வொரு குடும்பமும் ஒத்துழைக்க வேண்டும். தமிழகத்தில் 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு கர்ப்ப வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளன,” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், உலக செவிலியர் தினத்தை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற செவிலியர்கள் உடன் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வுகளில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து