முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி கேபிடல்ஸ் அணியின் இயக்குனராக கங்குலி நியமனம்

வியாழக்கிழமை, 16 மார்ச் 2023      விளையாட்டு
16-Ram-58-1-A

Source: provided

கார் விபத்தில் காயமடைந்ததால் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனான ரிஷப் பந்தால் ஐபிஎல் 2023 போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய கேப்டனைத் தேர்வு செய்யும் நிலைமை தில்லி கேபிடல்ஸ் அணிக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தில்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஆஸி. பேட்டர் டேவிட் வார்னர் தேர்வாகியுள்ளார். 

கடந்த வருடம் துணை கேப்டனாக இருந்த அக்‌ஷர் படேலுக்கு இந்த வருடமும் அதே பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 2016-ல் சன்ரைசர்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையில் ஐபிஎல் கோப்பையை வென்றது. கடந்த வருட ஐபிஎல் போட்டியில் 5 அரை சதங்களுடன் 432 ரன்கள் எடுத்தார் வார்னர். மேலும், தில்லி கேபிடல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநராக பிசிசிஐயின் முன்னாள் தலைவரான செளரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

________________

ஐபிஎல் தொடரில் இருந்து 

விலகினார் வில் ஜாக்ஸ்

ஐபிஎல் 2023 தொடருக்காக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் இங்கிலாந்தை சேர்ந்த ஆல்ரவுண்டரான வில் ஜாக்ஸ் என்பவரை ரூ. 3.2 கோடியில் ஆர்சிபி அணி வாங்கியது. ஏற்கனவே ஆர்சிபியில் கிளென் மேக்ஸ்வெல் இருக்கும் நிலையில், மிடில் ஆர்டருக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும் விதமாக வில் ஜாக்ஸை வாங்கியது.

ஐபிஎல் தொடர் மார்ச் 31-ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியபோது வில் ஜாக்ஸ் காயமடைந்துள்ளார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்தபோது அவரது தசையில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் காயத்தை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள், ஓய்வில் இருக்கமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

________________

நேபாளத்தில் கிரிக்கெட் போட்டி:

அலை போல் திரண்ட ரசிகர்கள்..!

நேபாளம் - அரபு அமீரகம் இடையேயான உலகக்கோப்பை லீக் தொடர் போட்டியை காண ரசிகர்கள் கடல் அலை போல் திரண்டனர். நேபாள நகரம் கீர்த்திப்பூரில் 15 ஆம் தேதி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை காண குவிந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் போட்டியை நேரில் ரசித்தனர்..

மேலும் போட்டிக்கான டிக்கெட் கிடைக்காமல் ,மைதானத்திற்கு வெளியே இருந்த ரசிகர்கள் மரங்களில் தொங்கியபடியும் பேருந்தின் மீது நின்றபடியும் போட்டியை கண்டு ரசித்தனர் . நேபாளத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் போட்டியை நேரில் பார்வையிட்ட புகைப்படம் இணையத்தில் அதிகம் வைராலகி வருகிறது.

________________

டோனியால் 2024 சீசனிலும் 

விளையாட முடியும்: ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி 2024 சீசனிலும் விளையாட முடியும் என அந்த அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். “டோனி அடுத்த ஆண்டு கூட ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடலாம். அது குறித்த விவரம் யாருமே அறிந்திருக்க மாட்டோம். அவரது உடற்திறன் மற்றும் பேட்டிங் செய்வதை பார்க்கும்போது அது நடக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. ஆனாலும், அது இந்த சீசனில் அவரது பேட்டிங் செயல்பாட்டை கொண்டே முடிவு செய்யப்படும்.

வலைப்பயிற்சியில் அவர் பறக்கவிடும் சிக்ஸர்களை பார்த்தால் நிச்சயம் அணியின் வெற்றிக்கு அவர் தனது பங்களிப்பை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் போட்டிகளில் விளையாடி ஓராண்டு காலம் ஆகிறது. அதனால் அது கொஞ்சம் சவாலாக இருக்கலாம்” என ரெய்னா தெரிவித்துள்ளார்.

________________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து