முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயற்கை வேளாண்மை கொள்கை: 3 நாட்களுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் சென்று அடைந்துள்ளதாக அமைச்சர் மகிழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2023      தமிழகம்
MRK 2023 03 19

Source: provided

சென்னை : இயற்கை வேளாண்மை கொள்கை வெளியிட்ட மூன்று நாட்களுக்குள், அதன் சாராம்சம் தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் சென்றடைந்துள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், 

முதல்வர் மு.க. ஸ்டாலினால் கடந்த 14-ம் தேதி அன்று தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023 வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில், இதற்கு முன்பாக அங்கக வேளாண்மைக்கு என்று எந்தவொரு கொள்கையும் இல்லாத நிலையில், அதன் தேவையை அறிந்து, மக்களின் உடல் நலத்தை பேணிக் காக்கவும், மண்வளம், இயற்கை வளத்தை காப்பதற்கும், நீடித்த நிலையான வேளாண்மையினை நமது மாநிலத்தில் உறுதிப்படுத்தும் நோக்கத்திலும் இந்த அங்கக வேளாண்மைக் கொள்கை வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கையினை வெளியிட்ட பிறகு, விவசாயிகளிடமிருந்தும், அங்கக வேளாண் ஆர்வலர்களிடமிருந்தும் அரசின் கொள்கையினை பாராட்டியும், மாறுபட்ட கருத்துக்களையும் தெரிவித்து, விமர்சனங்களும், திறனாய்வுகளும் வரத் தொடங்கியுள்ளன. அங்கக வேளாண்மைக் கொள்கையில் அதன் தேவை, நோக்கங்கள், நன்மைகள், அதற்கான உத்திகள், தகவல் பரிமாற்றம், சந்தைப்படுத்துதல், விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பான கருத்துக்கள் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

முதல்வர் வெளியிட்ட  இந்த அங்கக வேளாண்மை கொள்கையினை மூன்று நாட்களுக்குள், இதன் சாராம்சம் தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று, அங்கக வேளாண்மையில் ஆர்வமுள்ளவர்களிடமிருந்து நல்ல திறனாய்வு கருத்துக்களை பெற்று வருகிறது. இதுவே அங்கக வேளாண்மையினை நமது மாநிலத்தில் பரவலாக்குவதற்கு அரசு கொண்டு வந்துள்ள இந்த கொள்கைக்கு கிடைத்த உரமாகும். இவ்வாறு அதில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து