முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுபான கொள்கை முறைகேடு: அமலாக்கத்துறை முன்பு மீண்டும் ஆஜரான கவிதா

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      இந்தியா
Kavita 2023 03 20

Source: provided

புதுடெல்லி : டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறது. டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா உள்பட பலர் இந்த வழக்கில் கைதாகி உள்ளனர்.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 15-ந் தேதி அமலாக்கத்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய இருந்தது. அதில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகள் கவிதா, தொழில் அதிபர்கள் சரத் ரெட்டி, சீனிவாசலு ரெட்டி உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ள சவுத் குரூப் நிறுவனத்திடம் இருந்து சில நபர்கள் மூலம் ஆம் ஆத்மி கட்சிக்கு பல கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கவிதா விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார். 

இதேபோல சி.பி.ஐ. தரப்பிலும் கவிதா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பேரில் கடந்த டிசம்பர் 12-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் சி.பி.ஐ. 7 மணி நேரம் விசாரணை நடத்தியது. இதைத்தொடர்ந்து கவிதாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி கடந்த 16-ந் தேதி விசாரணை நடத்தினார்கள். அமலாக்கத்துறை அலுவலகத்தில் சுமார் 9 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

2-வது கட்ட விசாரணைக்காக அவர் கடந்த 16-ந் தேதி ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. அனால் அவர் ஆஜராகவில்லை. அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாக கவிதா தெரிவித்தார். இதை அமலாக்கத்துறை நிராகரித்தது. இந்நிலையில் நேற்று (20-ந் தேதி) அவர் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை உத்தரவிட்டு இருந்தது. அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராவதற்காக கவிதா தனது குடும்பத்தினருடன் சிறப்பு விமானம் மூலம் நேற்று முன்தினம் ஐதராபாத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.

நேற்று காலை அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு எம்.எல்.சி.யும், பாரத் ராஷ்டிரிய சமிதியை சேர்ந்த வருமான கவிதா ஆஜரானார். டெல்லியின் மதுபான கொள்கை முறைகேடு குறித்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து