Idhayam Matrimony

பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்துக்கு இ.பி.எஸ். பதில்

செவ்வாய்க்கிழமை, 13 மே 2025      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : பொள்ளாச்சி தீர்ப்பு குறித்த முதல்வர் மு.க. ஸ்டாலினின் கருத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் கருத்து கூறியுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்ற நிலையில் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி நேற்று தீர்ப்பளித்துள்ளார். அதன்படி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலினும் இதற்கு வரவேற்பு தெரிவித்ததுடன், 'அ.தி.மு.க .குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்!' என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக அ.தி.மு.க .பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'நீங்கள்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.

இபிஎஸ் தனது எக்ஸ் பக்கத்தில், "அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு. உங்களைப் போல் தி.மு.க. அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது. வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள். யார் வெட்கித் தலை குனிய வேண்டும்?

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட உங்கள் அமைச்சர் மீதும், சென்னை துணை மேயர் மீதும் விசாரணை நடத்த துப்பில்லாத நீங்கள்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்.  'யார் அந்த சார்' என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லாமல், அந்த சாரைக் காப்பாற்றத் துடிக்கும் நீங்கள்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும். நீட் ரகசியம் என்று நீங்களும், உங்கள் மகனும் மாணவர்களை ஏமாற்றிய போதே, உங்களுக்கு வெட்கம், மானமெல்லாம் இல்லை என்பது தெரிந்துவிட்டது. இருப்பினும், கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால், உங்கள் ஆட்சியில் பெண்கள் வெளியிலேயே வர முடியாத அவல நிலை இருப்பதையும், நாள்தோறும் பதியப்படும் போக்ஸோ வழக்குகளையும் பார்த்து கொஞ்சமாவது வெட்கித் தலைகுனியுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து