முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குல் : இந்தியா கடும் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2023      உலகம்
Khalistan 2023 03 21

Source: provided

சான்பிரான்சிஸ்கோ : அமெரிக்காவில் இந்திய தூதரகத்துக்குள் புகுந்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்திய தேசிய கொடியை அகற்றினர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் சான்பிரான் சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்துக்குள் காலிஸ்தான் ஆதரவாளர்கள் புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். காலிஸ்தான் ஆதரவாளர்கள் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் தூதரகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். தூதரகத்தின் கதவு, ஜன்னல்களை அடித்து நொருக்கி சூறையாடினர். தூதரக கட்டிடத்தின் வெளிப்புற சுவரில் பெயிண்டால், அம்ரிக் பாலுக்கு ஆதரவாக வாசகத்தை எழுதி உள்ளனர். 

இந்திய தூதரகத்துக்குள் கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக பொறுப்பு அதிகாரியை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை தனது அதிருப்தியை வெளியிட்டது. மேலும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியாவின் கவலையை வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகமும் அமெரிக்க உள் துறையிடம் வெளிப்படுத்தியதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதற்கிடையே இந்திய தூதரகம் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கெர்பி கூறும்போது, 'இந்திய தூதரகம் மீதான தாக்குதல் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து