முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுக்கு சுற்றுலா விசாவில் செல்பவர்கள் பணிபுரிய அனுமதி

வியாழக்கிழமை, 23 மார்ச் 2023      உலகம்
Visa 2023 03 23

அமெரிக்காவுக்கு சுற்றுலா விசாவில் செல்பவர்கள் வேலைகளுக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

அமெரிக்காவுக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் எச்1பி விசாவில் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். 

மேலும் சுற்றுலா விசா, வணிக விசாவில் ஏராளமானோர் அமெரிக்காவுக்கு சென்று வருகிறார்கள். இவர்கள் குறிப்பிட்ட காலம் வரைதான் அங்கு இருக்க முடியும். இதே போன்ற விசாவில் அமெரிக்காவுக்கு செல்பவர்கள் பணிபுரிய அனுமதி இல்லாமல் இருந்தது. 

இந்நிலையில் அமெரிக்க விசாவில் புதிய நடைமுறை கொண்டு வரப்படுகிறது. வணிக மற்றும் சுற்றுலா விசாவில் அமெரிக்காவுக்கு பயணிக்கும் தனிநபர், வேலைகளுக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்காலிக விசாவில் அமெரிக்காவில் இருந்தும் அவர்கள் பணிபுரிவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் புதிய வேலை வாய்ப்பை தொடங்கும் முன் பி1 (வணிகம்) மற்றும் பி2 (சுற்றுலா) விசாவை வேலைவாய்ப்பு அங்கீகரிக்கப்பட்ட நிலைக்கு மாற்றுவதற்கான மனு மற்றும் கோரிக்கை அளித்து அனுமதி பெற வேண்டும். 

விசாவின் நிலையை மாற்றும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அந்த நபர் அமெரிக்காவை விட்டு வெளியேறி பின்னர் புதிய வேலைவாய்ப்பை பெறுவதற்கான அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து