முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேச்சுவார்த்தைக்காக சீனாவுக்கு உக்ரைன் அதிபர் அழைப்பு

வியாழக்கிழமை, 23 மார்ச் 2023      உலகம்
Zelensky-2023 03 23

உக்ரைன் - ரஷ்யா போரில் அமைதி ஏற்பட பேச்சுவார்த்தைக்காக சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். இந்த சந்திப்பில் ரஷ்யா, சீனா பரஸ்பர உறவுகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. மேலும் உக்ரைன் உடனான போரை சீனாவின் முயற்சிகள் முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று புடின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு அழைப்பு விடுத்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெலன்ஸ்கி கூறும் போது, 

போர் நிறுத்தத்தை ஏற்படுத்த சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சீனாவிடமிருந்து இதுவரை பதில் வரவில்லை. நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். உரையாடலுக்கு அழைப்பு விடுக்கிறோம். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து