Idhayam Matrimony

5-வது டெஸ்ட் போட்டி: அறிமுகமாகிறார் அர்ஷ்தீப் சிங்?

செவ்வாய்க்கிழமை, 29 ஜூலை 2025      விளையாட்டு
Arshdeep-Singh 2025-07-29

Source: provided

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் இந்திய அணியில் இடது கை பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் அறிமுகம் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து முன்னிலை...

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில்  நாளை 31-ந் தேதி தொடங்குகிறது.

கட்டாய வெற்றி... 

தொடரை சமன் செய்ய இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் இந்திய அணி விளையாட உள்ளது. இதன் காரணமாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அர்ஷ்தீப் சிங் அறிமுகம்...

அந்த வரிசையில் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் இந்திய அணியில் இடது கை பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் அறிமுகம் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த போட்டியிலே (4-வது டெஸ்ட்) அறிமுகம் ஆவார் என்று எதிர்பார்த்த நிலையில், கடைசி நேரத்தில் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். இந்நிலையில் இந்த 5-வது போட்டியில் அவர் விளையாடுவது ஏறக்குறைய உறுதி ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. பல முன்னாள் வீரர்களும் தொடரின் ஆரம்பத்திலிருந்தே அர்ஷ்தீப் சிங் களமிறங்க வேண்டும் என்று கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து