முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் ‘லியோ’ படப்பிடிப்பு நிறைவு

வியாழக்கிழமை, 23 மார்ச் 2023      இந்தியா
Leo-2023-03-23

Source: provided

ஜம்மு: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் நிறைவடைந்துள்ள நிலையில், படக்குழு சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம், ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.

கடந்த ஒரு மாதமாக காஷ்மீரில் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தீவிரமாக நடைபெற்று வந்த இந்தப் படப்பிடிப்பில் அண்மையில் சஞ்சய் தத் நடிக்கும் காட்சிகள் நிறைவடைந்தன. இதனையடுத்து தற்போது படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திட்டமிட்ட நாட்களுக்கு முன்பாகவே படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காஷ்மீர் படப்பிடிப்பை முடிந்த கையுடன் நேற்று ‘லியோ’ படக்குழு சென்னை திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு 10 - 15 நாட்கள் சென்னையில் நடக்கும் எனவும், அதைத் தொடர்ந்து படக்குழு ஹைதராபாத் சென்று அங்கு படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக மே மாதம் படப்பிடிப்பு நிறைவடையும் என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 1 day ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 13 hours ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 15 hours ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து