முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை வென்ற வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2023      உலகம்
Rishi-Sunak 2023 03 24

Source: provided

லண்டன் : இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியை சந்தித்து உற்சாகமாக கிரிக்கெட் விளையாடினார். 

ரிஷி சுனக் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10 டவுனிங் தெருவில் வீரர்களை சந்தித்ததோடு சாம் கர்ரன் மற்றும் கிரிஸ் ஜோர்டான் வீசிய பந்துகளை எதிர்கொண்டு பேட்டிங் செய்தார். இது தொடர்பான காணொளியை பிரதமரின் மூத்த வீடியோகிராபர் லூகா போபா தனது டுவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார். 

 

இதற்கிடையே, இங்கிலாந்தின் ஒயிட் பால் கேப்டன் ஜோஸ் பட்லர் தனது அணியினருடன் நேற்று முன்தினம் பிரதமரை சந்தித்த போது அணியினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் வெளியிடுள்ளார். இது  கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து