முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் மீதான தகுதிநீக்க நடவடிக்கை: எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2023      இந்தியா
Kejriwal 20221 01 02

Source: provided

புதுடெல்லி : ராகுல் காந்தி அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக அவர் மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், ராகுல் காந்தி குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் உடனடியாக கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அவருக்கு ஜாமீனும் வழங்கியது சூரத் நீதிமன்றம்.

இந்த நிலையில் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.நீதிமன்ற தீர்ப்பையடுத்து, வயநாடு மக்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தியைத் தகுதிநீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் ராகுல் மீதான தகுதிநீக்க நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

ஜெய்ராம் ரமேஷ்:

ராகுல் தகுதி நீக்கத்தை எதிர்த்து சட்ட, அரசியல் ரீதியாக போராடுவோம். எங்களின் குரலை நசுக்க முடியாது. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்.பார்லி., கூட்டுக்குழு விசாரணை மற்றும் பிரதமர் மோடிக்கும் அதானிக்குமான தொடர்பு போன்றவற்றை மறைக்க ராகுகல் தகுதி நீக்கப்பட்டுள்ளார். இது இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என கூறி உள்ளார்.

உத்த்வ தாக்கரே:

ராகுலின் வேட்புமனு ரத்து செய்யப்பட்டது. திருடன், திருடன் என்று அழைப்பது நம் நாட்டில் குற்றமாகிவிட்டது.திருடர்களும் கொள்ளையர்களும் இன்னும் சுதந்திரமாக இருக்கிறார்கள். ராகுல் தண்டிக்கப்பட்டுள்ளார்.இது ஜனநாயகத்தை கொலை செய்துள்ளனர்.இது சர்வாதிகாரத்தை முடிவு கட்டுவதற்கான துவக்கம். எதிர்த்து போராடுவது மட்டுமே நல்ல முடிவை கொடுக்கும் என கூறினார்.

பினராயி விஜயன்:

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது, சங்பரிவார் அமைப்புகள் ஜனநாயகத்தின் மீது தொடுத்த வன்முறை தாக்குதல் என்று கூறியுள்ளார்.

கெஜ்ரிவால்:

நாட்டில் ஒரே ஒரு கட்சியும் ஒரே ஒரு தலைவரும் தான் இருக்க வேண்டும் என்ற சூழலை அவர்கள் (பாஜக) உருவாக்குகிறார்கள். பிற அனைத்துக் கட்சிகளையும் ஒழித்துவிட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இதைத்தான் சர்வாதிகாரம் என்கிறோம். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தை விட மோசமான அரசாங்கமாக மோடியின் அரசு உள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து