எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும் என்று பிரதமர் மோடி பேசினார்.
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவின் பதவிக்காலம் முன்பே முடிவடைந்து விட்ட போதிலும், சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலை முன்னிட்டு நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவருக்கான தேர்தல் நடத்துவது பற்றிய அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், அக்கட்சியின் தேசிய செயல் தலைவராக செயல்பட்டு வரும் நிதின் நபின் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவரை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், போட்டியின்றி தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சூழலில், பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக நிதின் நபீன் தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி முறைப்படி அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து அவர் பா.ஜ.க. தேசிய தலைவராக நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
டெல்லியில் கட்சி தலைமையகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நிதினை வாழ்த்தினார். இதன்பின்னர் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசும்போது, கட்சி என வரும்போது, நிதின் நபீன்தான் பாஸ். நான் கட்சியின் ஒரு சிறிய தொண்டன். தற்போது மதிப்பிற்குரிய நிதின் நபீன்தான் நம் அனைவருக்கும் தலைவர். பா.ஜ.க.வை நிர்வகிப்பது மட்டுமே அவருடைய பொறுப்பு அல்ல. அதனையும் கடந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து கட்சிகள் இடையேயும் ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கூறினார். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக உள்ளது. அது நடக்க வேண்டும் என விதிக்கப்பட்டு விட்டது. இந்த முக்கிய காலகட்டத்தில் நம்முடைய நிதின் நபீன் அவர்கள் பா.ஜ.க.வின் மரபை முன்னெடுத்து செல்வார் என்றும் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


