முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இண்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜார்டன் மூரெ காலமானார் : சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் இரங்கல்

சனிக்கிழமை, 25 மார்ச் 2023      உலகம்
Jordan-Moore 2023 03 25

Source: provided

நியூயார்க் : இண்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜார்டன் மூரெ தனது 94 வயதில் காலமானார். அவரது மறைவுக்கு சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

தற்போது புழக்கத்தில் இருக்கும் ஏராளமான கம்ப்யூடிங் சாதனங்கள் உருவாக மூலக் காரணமாக விளங்கியவர்களில் ஜார்டன் மூரெ இடம்பெற்று இருந்தார்.  கடந்த 24-ம் தேதி அமைதியான முறையில் இவரின் உயிர் பிரிந்ததாக இண்டெல் நிறுவன வலைத்தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மரணிக்கும் தருவாயில் ஜார்டன் மூரெ அவரின் குடும்பத்தாருடன் ஹவாயில் உள்ள தனது வீட்டில் இருந்துள்ளார். சிலிகான் வேலியில் மதிப்புமிக்க நபர்களில் ஒருவராக ஜார்டன் மூரெ இருந்து வந்தார். 

ஜார்டன் மூரெ மறைவுக்கு ஆப்பிள் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் மற்றும் கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை ஆகியோர் இரங்கல் தெரிவிக்கும் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். 

இவரின் லட்சியம் நம்மை போன்று பலருக்கு தொழில்நுட்ப துறையில் கவனம் செலுத்த தூண்டியது. இவர் எனக்கு தூண்டுகோளாக இருந்துள்ளார். இவரின் பிரிவால் வாடும் குடும்பத்தார் மற்றும் இண்டெல் நிறுவனத்தார் அனைவருக்கும் இரங்கல்கள் என்று சுந்தர் பிச்சை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

1968 ஜூலை மாத வாக்கில் இண்டெல் நிறுவனத்தை ஜார்டன் மூரெ மற்றும் ராபர்ட் நைஸ் இணைந்து துவங்கினர். இருவரும் நீண்டகால நண்பர்கள் ஆவர். மூரெ இண்டெல் நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவராக பணியாற்றி வந்தார். பின் 1979-ம் ஆண்டு இவர் இண்டெல் நிறுவன நிர்வாக குழு தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து