முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

13-வது உலக மகளிர் குத்துச்சண்டை: இந்தியாவின் போரா, நிது தங்கம் வென்று சாதனை

சனிக்கிழமை, 25 மார்ச் 2023      விளையாட்டு
Bora-Nidu 2023 03 25

Source: provided

டெல்லி : சீன வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் ஸ்வீட்டி போரா மற்றும் நிதி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

சீன வீராங்கனையை... 

13-வது உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில், 81 கிலோ பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் ஸ்வீட்டி போரா சீனாவின் வாங் லீனாவை எதிர்கொண்டார். பரபரப்பான நடந்த இந்த ஆட்டத்தில் சீன வீராங்கனை லீனானை 4-3 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் ஸ்வீட்டி போரா தங்கப்பதக்கம் வென்று சாதனைபடைத்தார்.

நிது கங்காஸ்... 

81 கிலோ எடைப்பிரிவில் சீன வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் ஸ்வீட்டி போராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. முன்னதாக இந்திய வீராங்கனை நிது கங்காஸ் மங்கோலிய வீராங்கனை லுட்சிஹன் அட்லெட்செட்கை எதிர்கொண்டார். போட்டி துவங்கியது முதலே நிது கங்காஸ் ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் 5-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் மங்கோலிய வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் நிது கங்காஸ் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். 48 கிலோ எடைப்பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற நிது கங்காஸ்க்கு பல்வேறு தரப்பிலும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து