முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூடானில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 10 தொழிலாளர்கள் பலி

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2023      உலகம்
Sudan 2023 04 01

Source: provided

கார்டூம் : சூடானில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே  பலியாயினர். 

ஆப்பிரிக்க நாடான சூடானில் பல்வேறு தங்க சுரங்கங்கள் உள்ளன. வடக்கு சூடான் பகுதியில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த போது திடீரென அந்த சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்தது. 

இதில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அங்கு இடிபாடுகளில் சிக்கி கொண்டிருந்த சுரங்க தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

எனினும் இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பல தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து