முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய மாவட்டமாக ஆரணி உருவாக்கப்படுமா? - சட்டசபையில் அமைச்சர் பதில்

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2023      தமிழகம்
KKSSR 2023 04 01

Source: provided

சென்னை : ஆரணி, கும்பகோணம் புதிய மாவட்டமாக உருவாக்கப்படுமா என்பது  குறித்து சட்டசபையில்  எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் பதில் அளித்துள்ளார். 

தமிழக சட்டசபையில் கேள்வி  நேரத்தின் போது, ஆரணியை தலைமையகமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுமா? எனவும், கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா என்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சேவூர் ராமச்சந்திரன், கோவி செழியன் ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறியதாவது,

வருவாய்த்துறை அரசாணை எண்.279-ன் படி ஒரு மாவட்டத்தை உருவாக்குவதற்கான சட்ட ரீதியான தகுதிகளை பூர்த்தி செய்யாததால் ஆரணியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்க முடியாது. 

கோவில்பட்டி, பழனி, பொள்ளாச்சி உள்பட 8 மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஆர்.டி.ஓ. அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகியவை உருவாக்கப்பட வேண்டியிருந்தால் நிதி நிலைமைக்கு ஏற்ப முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து