முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக பத்திரிகை சுதந்திர குறியீடு: ஆப்கானிஸ்தானை விட மிகவும் பின்தங்கிய நிலையில் இந்தியா..!

புதன்கிழமை, 3 மே 2023      இந்தியா
World-Press 2023-05-03

Source: provided

புதுடெல்லி : உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது, 180 நாடுகளில் 161 வது இடத்தில் உள்ளது.

நிருபர்களுக்கு எல்லை இல்லை (ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்) தனது உலக பத்திரிக்கை சுதந்திர குறியீட்டின் 21வது பதிப்பை நேற்று வெளியிட்டது. பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட 180 நாடுகளில் இந்தியா 161 வது இடத்திற்கு சரிந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு 150 வது இடத்தில் இருந்த 11 வது தரவரிசைக்கு மோசமாக சரிந்து உள்ளது.

தெற்காசியாவிலும் கூட,தரவரிசைபட்டியலில் மிக மோசமான சரிவை இந்தியா கண்டுள்ளது. வங்காள தேச்ம சற்று மோசமாக இருந்தாலும், 163 வது இடத்தில் உள்ளது, பாகிஸ்தான் இந்தியாவை விட 150 வது இடத்தில் உள்ளது. தலிபான் அரசாங்கம் சுதந்திர ஊடகவியலாளர்களுக்கு நண்பன் இல்லை என்று அறியப்படும் ஆப்கானிஸ்தானும் கூட 152 வது இடத்தில் உள்ளது. பூட்டான் 90 வது இடத்திலும், இலங்கை 135 வது இடத்திலும் உள்ளன.

பத்திரிகையாளர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று நம்பும் 31 நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. இந்தியா ஏன் உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் மிகவும் பின்தங்கியுள்ளது என்பது குறித்து ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் கூறியதாவது:- "பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறை, அரசியல் சார்புடைய ஊடகங்கள் மற்றும் ஊடக உரிமையின் குவிப்பு இவை அனைத்தும் "உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில்" பத்திரிகை சுதந்திரம் நெருக்கடியில் உள்ளது என்பதை காட்டுகிறது என கூறி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 weeks 20 hours ago இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 20 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 months 3 weeks ago
வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 months 3 weeks ago ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 2 months 3 weeks ago தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து