எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : யு.பி.எஸ்.சி குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நேற்று நாடு முழுவதும் 73 நகரங்களில் நடைபெற்றது.
நாடு முழுவதும் நேற்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 7 லட்சம் பேர் இந்தத் தேர்வினை எழுதினர்.
ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யு.பி.எஸ்.சி. ஆண்டு தோறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், மற்றும் ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான உயர்பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இது முதல் நிலை, முதன்மை தேர்வு மற்றும் நேர்க்காணல் என 3 கட்டங்களாக தேர்வு நடத்தப்படுகிறது.
அந்தவகையில் நடப்பு ஆண்டுக்கான குடிமைப் பணிகளில் அடங்கிய 1,105 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 1-ம் தேதி வெளியானது. தொடர்ந்து பிப்ரவரி 21-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இந்தியா முழுவதிலிருந்தும் சுமார் 7 லட்சம் பட்டதாரிகள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதில், தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான முதல் நிலை தேர்வு நேற்று நடைபெறும் என்று யு.பி.எஸ்.சி. அறிவித்திருந்தது.
அதன்படி குடிமைப் பணிக்கான முதல்நிலை தேர்வு இந்தியா முழுவதும் நேற்று 73 நகரங்களில் நடந்தது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய 5 நகரங்களில் தேர்வு நடைபெற்றது.
காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை பொது அறிவு தேர்வும், மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறனறிவு தேர்வும் நடைபெற்றது. அனைத்து தேர்வு மையங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். தேர்வர்கள் செல்போன் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்லக் கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சோனியா மருத்துவமனையில் அனுமதி
06 Jan 2026புதுடெல்லி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் தில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
திடீர் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு: இந்தோனேசியாவில் 9 பேர் பலி
06 Jan 2026ஜகார்த்தா, இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான வடக்கு சுலவேசியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: முகமது சமி நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் சம்மன்
06 Jan 2026கொல்கத்தா, எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமிக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
-
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
06 Jan 2026டோக்கியோ, ஜப்பானில் நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை சுனாமி ஏற்படும் அச்சம் மக்கள் இடையே ஏற்பட்டது.
-
அதிபர் ட்ரம்ப்புடன் நோபல் பரிசை பகிர விரும்பும் வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர்
06 Jan 2026காரகஸ், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொள்ள வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ விருப்பம் தெரிவித்துள்ளார்.
-
வெனிசுலாவில் தேர்தல் கிடையாது: ட்ரம்ப்
06 Jan 2026வாஷிங்டன், வெனிசுலாவில் இப்போதைக்கு தேர்தல் கிடையாது என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெனிசுலாவை மறுகட்டமைப்பு செய்ய வேண்டியது அவசியம் என்றும் தெரிவ
-
தொடர்ந்து சாதனைகளை படையுங்கள்: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
06 Jan 2026சென்னை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை நிச்சயம் பழிதீர்ப்போம்: நிகோலஸ் மதுரோவின் மகன் உறுதி
06 Jan 2026நியூயார்க், அமெரிக்காவை கண்டிப்பாக பழிதீர்ப்போம் என்று அமெரிக்க படையால் கைது செய்யப்பட்ட நிகோலஸ் மதுரோவின் மகன் குரேரா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-01-2026
07 Jan 2026


