முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்குமா? - பேச்சுவார்த்தைக்கு தயாராகும் ஐ.சி.சி.

புதன்கிழமை, 31 மே 2023      விளையாட்டு
ICC 2023-05-31

Source: provided

லண்டன் : இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்குமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பெரிய சிக்கல்... 

உலகக் கோப்பைக்கு முன்பாக பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி, பாகிஸ்தான் வர மறுத்தால், பாகிஸ்தான் அணியும் உலகக் கோப்பை தொடருக்கு இந்தியா செல்லாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜீம் சேத்தி தெளிவாகக் கூறியதை அடுத்து பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பேச்சு வார்த்தை... 

இது தொடர்பாக ஐசிசி தலைவர் கிரெக் பார்க்ளே, சிஇஓ ஜெஃப் அலார்டிஸ் ஆகியோர் லாகூருக்கு வந்துள்ளதாகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு சுமுக முடிவு காணவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நஜீம் திட்டவட்டம்...

பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையில் பங்கேற்க வேண்டுமென்றால் பாகிஸ்தான் போட்டிகளை நடுநிலை மைதானங்களில்தான் வைக்க வேண்டும், அப்படித்தான் பாகிஸ்தானில் நடக்கும் போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கோரியது என்றும். அதே போன்றுதான் பாகிஸ்தான் அணியும் ஆடும் என்று நஜீம் சேத்தி திட்டவட்டமாகக் கூறியதையடுத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நிச்சயம் பங்கேற்காது...

இந்தியாவுக்காக தொடரையே நடுநிலை மைதானங்களுக்கு மாற்றினால் பாகிஸ்தான் நிச்சயம் பங்கேற்காது. பாகிஸ்தானில் ஆசியக் கோப்பையை நடத்த முடியாது எனில் அது உலகக் கோப்பை தொடரிலும் விளைவுகளை, தாக்கங்களை ஏற்படுத்தும் என்று நஜீம் சேத்தி கூறியதோடு, இந்தியா இங்கு நடக்கும் தொடர்களுக்கு நடுநிலை மைதானம் கோருவதும், அதே தாங்கள் நடத்தும் உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் இந்தியாவுக்கு வந்து ஆட வேண்டும் என்ற ஒற்றை நிலைப்பாட்டை ஏற்க முடியாது என்றும் பாகிஸ்தான் திட்டவட்டமாகக் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரிய தலைவலியாக... 

ஐசிசி வட்டாரத்தில் இந்த நெருக்கடி இவ்வாறாகப் பார்க்கப்படுகிறது: அதாவது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரும் இரட்டை நடுநிலை மைதானங்கள் என்ற மாடல் ஏற்கப்பட்டால், உலகக் கோப்பைக்கும் பாகிஸ்தான் தங்கள் போட்டிகளுக்கு நடுநிலை மைதானங்களைக் கோரும், இதைச் சமாளிப்பதுதான் இப்போது ஐசிசியின் பெரிய தலைவலியாக உள்ளது.

ஐ.சி.சி. தயாராகிறது...

எனவே, ஐசிசி அதிகாரிகள் தற்போது லாகூருக்கு வந்து பாகிஸ்தான் வாரியத்துடன் பேச்சு வார்த்தை நடத்தவிருப்பதாக தெரிகிறது. மேலும் ஆசியக் கோப்பை உலகக்கோப்பை விவகாரத்தில் பிசிசிஐ, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடையே ஏற்படும் மாறுபட்ட நிலைப்பாட்டை சரி செய்வதற்கு இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்த ஐசிசி தயாராகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து