முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை சி.பி.சி.ஐ.டி. அலுவலக கட்டிடத்தின் மாடியில் தீ விபத்து

வியாழக்கிழமை, 1 ஜூன் 2023      தமிழகம்
CBCID

சென்னை, சென்னையில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் உள்ள மாடியில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை எழும்பூரில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் நான்கு மாடி கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல்  அலுவலகம் செயல்பட்டு வந்தது. அப்போது அலுவலக கட்டிடத்தின் மாடியில் திடீரென தீ பற்றி எரிந்தது. 

இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அந்த இடத்தில் இருந்து வேகமாக வெளியேறினர். இதனையடுத்து காவல்துறையினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். அதற்குள் கட்டிடத்தில் இருந்த காவல் துறையினர் அலுவலக மாடியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். 

மொட்டை மாடியில் இருந்த ஏ.சி. சாதனத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தீவிபத்தில் எந்த வித ஆவணங்களும் பாதிக்கப்படவில்லையென முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து எழும்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 days 17 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 day ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 day ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து