எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புவனேஷ்வர் : ஒடிஷா ரயில் விபத்து குறித்து அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது. இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 288 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 747 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் 56 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒடிசா ரயில்கள் விபத்து நாடு முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையே ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் கோரமண்டல் விரைவு ரயில் உள்பட மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான இடத்துக்கு நேரில் வந்த பிரதமர் நரேந்திர மோடி, மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார். டெல்லியில் இருந்து புவனேஸ்வரத்துக்கு விமானத்தில் வந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் நேராக பாலாசோரில் விபத்துப் பகுதிக்கு வந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி காயமடைந்தவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்ளுக்கு எந்த சிக்கலையும் எதிர்கொள்ளாமல் இருக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு அனைத்து விதமான நடவடிக்கை எடுக்கும் என்றும், அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |