முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசா ரெயில் விபத்து: இதுவரை 70 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன

சனிக்கிழமை, 3 ஜூன் 2023      இந்தியா
Coromandel 2023-06-03

Source: provided

புவனேஷ்வர் : ஒடிசா ரெயில் விபத்தில் இறந்த 237 பேரில் 70 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது. இந்த கோர விபத்தில் 17 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஒடிசாவில் கட்டாக் மருத்துவமனையில் தமிழக அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தினர். ஒடிசா ரெயில் விபத்தில் இறந்த 237 பேரில் 70 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட 70 பேரில் யாரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் 167 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என தெரிய வந்துள்ளது. பாலசூரில் சிகிச்சை பெறுபவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து