முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: முதல் இரண்டு போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

சனிக்கிழமை, 3 ஜூன் 2023      விளையாட்டு
England-team 2023-06-03

Source: provided

லண்டன் : ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான முதல் இரு போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
லார்ட்ஸ் மைதானத்தில்...
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்து எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இந்த போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி முடிவடைந்த பின்னர் கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது.
வரும் 16ம் தேதி...
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரும் 16ம் தேதி பர்மிங்காமில் தொடங்க உள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு எதிராக வரும் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போடியில் பங்கேற்கிறது.
2 டெஸ்ட் போட்டி....
இந்நிலையில் ஆஷஸ் தொடருக்கான முதல் இரு டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியில் அயர்லாந்து தொடரில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து அணி:
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஓலி போப், ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), ஜோ ரூட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், ஜேக் லீச், பென் டக்கட், ஜேக் க்ராவ்லி, மேத்யூ பாட்ஸ், ஓலி ராபின்சன், டேன் லாரன்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஜோஷ் டங்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து