Idhayam Matrimony

நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி: மேட்டூர் அணை நீர்மட்டம் 103.73 அடியாக உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2023      தமிழகம்
Mettur Dam 2023-06-02

Source: provided

சேலம் : நீர்வரத்து அதிகரிப்பை தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 103.73 அடியாக உயர்ந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக இருந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து கடந்த 2 நாட்களாக 1500 கன அடியாக வந்த நிலையில் நேற்று முன்தினம் 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
அதே சமயம், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று முன்தினம் 1804 கன அடியாக இருந்த நிலையில், நேற்று காலை விநாடிக்கு 2267 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் நேற்று காலை 103.73 கனஅடியாக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து