முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேஜிக் இங்கிலீஷ் லேர்னிங் படி என்ற தமிழக அரசின் புதிய திட்டம் துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2023      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

சென்னை : சமூக பாதுகாப்பு துறையின் மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், மேஜிக் இங்கிலீஷ் லேர்னிங் படி என்ற புதிய செயல்திட்டத்தை, அரசு நடத்தும் 36 குழந்தை பராமரிப்பு நிலையங்களில் தொடங்கியிருக்கிறது.
கரடி பாத்  கல்வியியலின் ஆதரவோடு உருவாக்கப்பட்டிருக்கும் ஆசிரியருக்கான ஒரு ஆன்ராய்டு செயலியும் இதனோடு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. கரடி பாத் எஜுகேஷன் கம்பெனியால் உருவாக்கப்பட்ட இச்செயல்திட்டத்தை சமூக பாதுகாப்பு துறையின் இயக்குநரும் மற்றும் மாநில குழந்தை பாதுகாப்பு சங்கத்தின் செயலருமான  அமர் குஷாவா   தொடங்கி வைத்தார்.
ஆங்கில மொழித்திறன் மேம்பாடு செயல்திட்டமான மேஜிக் இங்கிலீஷ் லேர்னிங் படி என்பது அரசால் நடத்தப்பட்டுவரும் குழந்தை பராமரிப்பு நிலையங்களில்  உள்ள குழந்தைகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
இச்செயல்திட்ட தொடக்க விழாவின்போது சமூக பாதுகாப்பு துறையின் இயக்குநரும், மாநில குழந்தை பாதுகாப்பு சங்கத்தின் செயலருமான  அமர் குஷாவா, இந்திவழி கல்வி கற்பிக்கும் உத்தரபிரதேசத்தின் ஒரு கிராம பள்ளியில் தனது வாழ்க்கையை தொடங்கி தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளை மிக சரளமாக பேசுகிற திறன்பெற்று தமிழகத்தில் ஒரு இந்திய ஆட்சி பணியாளராக  முன்னேற்றமடைந்திருக்கும் தனது வாழ்க்கை பயணம் பற்றி பகிர்ந்துகொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து