முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொகுதி வாரியாக ஜூன் 17-ல் மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்

புதன்கிழமை, 7 ஜூன் 2023      சினிமா
Vijay 2023-04-13

Source: provided

சென்னை : தமிழகத்தில் தொகுதி வாரியாக 10, 12-ம் வகுப்புத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை நடிகர் விஜய் ஜூன் 17ஆம் தேதி நேரில் சந்திக்கவுள்ளார்.

நடிகர் விஜய் தன் தொண்டர்கள் மூலம் பல சமூக சேவைகளை செய்து வருகிறார். இவர் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை சந்திக்கவுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளில் உள்ள 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தலா மூன்று மாணவர்கள் வீதம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு பரிசு, கல்வி உதவித் தொகை வழங்க, விஜய் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ’நடிகர் விஜய்யின் உத்தரவுப்படி வரும் 17ஆம் தேதி அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. convention centre-ல் 2023ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தளபதி விஜய் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள், ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து