முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் அமெரிக்காவில் மோசமான காற்றை சுவாசிக்கும் மக்கள்

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2023      உலகம்
America 2023 06 09

Source: provided

வாஷிங்டன் : கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் அமெரிக்காவில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் மோசமான காற்றை சுவாசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கனடாவில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாகின. இந்த தீயை அணைப்பதற்காக கனடா அரசு அண்டை நாடுகளின் உதவியையும் நாடி உள்ளது. 

இந்த காட்டுத்தீ காரணமாக அண்டை நாடான அமெரிக்காவிலும் பல இடங்கள் புகை மண்டலமாக காட்சியளிக்கின்றன. இதனால் அங்கு முகமூடி அணிந்து வெளியே செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் காற்றின் தரம் குறித்து அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் அளவீடு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டது. இதில் நியூயார்க், பென்சில்வேனியா உள்பட முக்கிய நகரங்களில் காற்றின் தரக்குறியீடு 400-ஐ தாண்டியதாக பதிவாகி உள்ளது. 

இந்த அளவு 300-ஐ தாண்டினாலே ஆபத்து என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அங்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் மோசமான காற்றை சுவாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 days 23 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 day ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 day ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து