எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஹெட்டிங்லே:ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸி. வீரர் மிட்செல் மார்ஷ் சதம் அடித்து அசத்தினார். ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 5 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பிராட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஹெட்டிங்லேயில்...
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் நேற்றஉ தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கவாஜா களமிறங்கினர். டேவிட் வார்னர் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். கவாஜா 13 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த லபுசென் 21 ரன்னிலும், ஸ்மித் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. 5வது விக்கெட்டுக்கு இணைந்த டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் ஜோடி நிதானமாக ஆடி 155 ரன்களை சேர்த்தது. மார்ஷ் சதமடித்தார்.
263 ரன்களுக்கு அவுட்...
தேநீர் இடைவேளைக்கு பிறகு மிட்செல் மார்ஷ் 118 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து டிராவிஸ் ஹெட் 39 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். இறுதியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 5 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பிராட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கி விளையாடி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


