முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகையில் இருந்து இலங்கைக்கு அக்டோபரில் பயணிகள் கப்பல் : அமைச்சர் எ.வ.வேலு தகவல்

புதன்கிழமை, 20 செப்டம்பர் 2023      தமிழகம்
EVa-Velu 2023-09-19

Source: provided

நாகை : நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பயணிகள் விரைவு கப்பலை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார். 

நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்று வரும் பணிகளை நேற்று அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, இலங்கையில் உள்ள காங்கேச துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் விரைவு பயணியர் கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு கடல்சார் வாரியம், ஒன்றிய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை மற்றும் வெளியுறவுத் துறை மூலம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் விரைவு பயணியர் கப்பல் போக்குவரத்தை நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த பயணியர் கப்பல் பயணம், வெளிநாட்டு பயணம் என்பதால் ஒன்றிய அரசின் சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் கையாள மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. 

நாகப்பட்டினம் துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், தமிழக அரசுடன் இணைந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தினைத் துவக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கை மக்கள் குறிப்பாக, தமிழ் மக்கள் தங்களின் கல்வி, மருத்துவம், உணவுப் பொருட்கள், வணிகம், ஆன்மீகம் மற்றும் சுற்றுலா ஆகிய தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைவதுடன், தமிழகத்தில்  உள்ள டெல்டா மாவட்டங்கள் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பகுதிகள், கலாச்சாரப் பகிர்வு, பொருளாதாரம் ஆகியவற்றில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து