முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களவையில் பா.ஜ.க. எம்.பி ரமேஷ் பிதுரி சர்ச்சை பேச்சு : சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2023      இந்தியா
Ramesh-Bidhuri 2023-09-22

Source: provided

புதுடெல்லி : மக்களவையில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜ.க. எம்.பி.க்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடும் எச்சரிக்கை விடுத்தார்.  

பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது .புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தொடரில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேறியது. முன்னதாக இந்த மசோதா மீது விவாதமும் நடைபெற்றது. 

அதே போல், சந்திரயான் திட்டம் வெற்றி பெற்றது குறித்தும் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலி குறித்து பா.ஜ.க. எம்.பி ரமேஷ் பிதுரி கூறிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜ.க. எம்.பி, சர்ச்சைக்குரிய அந்த வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி விமர்சித்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்

உடனடியாக எழுந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. எம்.பி.யின் பேச்சுக்கு தான் மன்னிப்பு கோருவதாக கூறினார். எம்.பியின் சர்ச்சைக்குரிய பேச்சு அவைக்குறிப்பில் இருந்தும் நீக்கப்பட்டது. மேலும் சபாநாயகர் ஓம் பிர்லாவும் கடும் எச்சரிக்கை விடுத்தார். 

எனினும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள், பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரியை அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் பாராளுமன்றத்தை மட்டும் இல்லை, ஒவ்வொரு இந்தியனையும் அவமதித்து விட்டதாக சாடினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து