முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐகோர்ட்டில் சொத்து விவரங்களை தாக்கல் செய்தார் நடிகர் விஷால் 29-ம் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2023      சினிமா
Vishal 2023 07 01

Source: provided

சென்னை : லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நேற்று தனது சொத்து விபரங்களை நடிகர் விஷால் தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி ஆஷா வரும் 29-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

ஆனால் அதனை மீறி வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, விஷால் தரப்பில் சொத்து, வங்கி கணக்கு விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கு விசாரணையை நீதிபதி ஆஷா வரும் 29-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 2 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து