முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறைந்த பா.ஜ.க. தலைவரின் சிலைக்கு மரியாதை செலுத்திய பீகார் முதல்வர்

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2023      இந்தியா
nitish-kumar

Source: provided

பாட்னா : பா.ஜ.க.வின் மறைந்த தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முதல்வருமான நிதிஷ் குமார் பங்கேற்று உபாத்யாயாவின் மரியாதை செலுத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்துவந்த நிதிஷ் குமார், அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறி, பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை தேசிய அளவில் கட்டமைக்க முயற்சிகளை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக, எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நிதிஷ் குமார் தலைமையில் பாட்னாவில் நடைபெற்றது. 

இந்நிலையில், பா.ஜ.க.வின் முந்தைய அமைப்பான பாரதிய ஜன சங்கத்தின் தலைவர் தீன்தயாள் உபாத்யாயவின் பிறந்த நாளை முன்னிட்டு, பாட்னாவில் உள்ள அவரது சிலைக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த நிதிஷ் குமார், 

தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஒன்று. அதன்படி நடைபெற்ற அரசு விழாவில் நான் பங்கேற்றேன். நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம். அனைவரோடும் இணைந்து பணியாற்றி வருகிறோம். மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக எதிர்காலத்திலும் இது தொடரும். பா.ஜ.க. கூட்டணியோடு நெருங்கவில்லை. இண்டியா கூட்டணியை ஒருங்கிணைக்க நான் பணியாற்றியதை அனைவரும் அறிவார்கள். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 2 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து