முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜன. 22-ல் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் : கட்டுமான குழு தலைவர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 26 செப்டம்பர் 2023      இந்தியா
Ayodhya 2023 07-28

Source: provided

அயோத்தி : உத்தரபிரதேசத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் என  கட்டுமான குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். 

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில், ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. இக்கோவில் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கோவிலின் முதல் தளத்தில் மும்முரமாக வேலை நடைபெற்று வருகிறது.  பிரதமர் மோடி 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், மூன்று தளங்களாக அமைக்கப்படுகிறது 

கோவிலை சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம், அனுமன் சிலை, ராமாயண நுாலகம், மகரிஷி, வால்மிகி ஆராய்ச்சி  நிலையம் மூலவர் மண்டபம் உட்பட 6 மண்டபங்கள் அமைய உள்ளன. மூலவர் கோபுரத்தின் உயரம் 161 அடி உயரத்தில்  கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் என கட்டுமான குழு  நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். மேலும் டிசம்பர் மாதத்திற்குள் முதல்தளம் முடிந்து விடும் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 2 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து