முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2023      உலகம்
Nobel-Prizee 2023-10-02

Source: provided

வாஷிங்டன் : கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்த 2 மருத்துவர்கள், இந்த ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நடப்பாண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு ஹங்கேரியை சேர்ந்த கட்டாலின் கரிக்கோ, அமெரிக்காவை சேர்ந்த ட்ரே வீஸ்மேன் ஆகிய மருத்துவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

 இது குறித்து நோபல் பரிசு தேர்வுக்குழு கூறியிருப்பதாவது, 

2023-ம் ஆண்டின் நோபல் பரிசு பெற்ற கடாலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோரின் கண்டுபிடிப்புகள் 2020-ம் ஆண்டின் பிற்பகுதியில் மிகவும் வெற்றிகரமான இரண்டு எம்.ஆர்.என்.ஏ. அடிப்படையிலான கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் கிடைக்க வாய்ப்பை ஏற்படுத்தின. அதன் மூலம், உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டனர்.

மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற கடாலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன்,  அடிப்படை மூலக்கூறு மாற்றியமைக்கப்பட்ட எம்.ஆர்.என்.ஏ., எதிர்வினைகளை செயல்படுத்துவதைத் தடுக்கவும் மற்றும் செல்களுக்கு எம்.ஆர்.ஏன்.ஏ. வழங்கப்படும் போது புரத உற்பத்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது என்பதைக் கண்டறிந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-ம் ஆண்டு மருத்துவப் பரிசு பெற்ற கடாலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோர் தங்கள் முடிவுகளை 2005-ம் ஆண்டு ஆய்வறிக்கையில் வெளியிட்டிருந்தனர். ஆனால் அது அந்த நேரத்தில் அதிக கவனம் பெறவில்லை. ஆனால் கொரோனா தொற்று நோய்களின் போது மனிதகுலத்தை காப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றங்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. 

இதன்மூலம்தான், 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக பயனுள்ள எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசிகளை உருவாக்குவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது. எனவே மருத்துவத் துறையில் சிறப்பான பங்களிப்புக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படவிருக்கிறது.

நடப்பாண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் நேற்று  தொடங்கின. இயற்பியல் பிரிவுக்கான நோபல் பரிசு இன்று செவ்வாய்க் கிழமையும், வேதியியல் பிரிவுக்கான நோபல் பரிசு நாளை புதன்கிழமையும், இலக்கியத்துக்கான் நோபல் வியாழக்கிழமையும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும்  அறிவிக்கப்பட உள்ளது  குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து