முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் காத்வி மரணம் : திரையுலகம் அதிர்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 19 நவம்பர் 2023      சினிமா
Sanjay-Gadvi 2023-11-19

Source: provided

மும்பை : தூம் மற்றும் தூம் - 2 படங்களை இயக்கிய பிரபல டைரக்டர் சஞ்சய் காத்வி(56) மாரடைப்பால் காலமானார். 

2004-ம் ஆண்டு அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான படம் தூம். இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து 2006-ம் ஆண்டு ஹிருத்திக் ரோஷன் நடித்து வெளியான தூம் - 2 திரைப்படமும் பெரும் வெற்றி பெற்றது. இந்த இரண்டு படங்களை இயக்கியவர் சஞ்சய் காத்வி. இவை தவிர தேரே லியே, மேரே யார் கி ஷாதி ஹே உள்ளிட்ட திரைப்படங்களையும் சஞ்சய் காத்வி இயக்கியுள்ளார். 

இந்த நிலையில், 56 வயதாகும் சஞ்சய் காத்வி நேற்று காலை 9.30 மணியளவில் மும்பையில் உள்ள தனது வீட்டில் இருந்த போது மாரடைப்பால் காலமானார். இது குறித்து அவரது மகள் சஞ்சினா கூறுகையில், 

அவர் மிகவும் ஆரோக்கியமாக இருந்ததாகவும், அவரது உடலில் எந்த பிரச்சினைகளும் இதற்கு முன்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். சஞ்சய் காத்விக்கு ஜினா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். சஞ்சய் காத்வி மறைவு பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர்கள் அபிஷேக் பச்சன், பிபாஷா பாசு ஆகியோர் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். சஞ்சய் காத்விக்கு வரும் 22-ம் தேதி பிறந்தநாள் வரும் நிலையில், அவர் மரணம் அடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து