முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அல்ஷிபா மருத்துவமனையில் உள்ள பணயக் கைதிகள் வீடியோ வெளியிட்டது இஸ்ரேல்

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2023      உலகம்
Gaza-Hospital 2023-11-21

டெல் அவிவ், காசாவின் மிகப் பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையில் பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் பிடித்து  வைத்திருப்பதாக இஸ்ரேல் வீடியோ வெளியிட்டுள்ளது. 

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7-ம் தேதி ஹமாஸ் குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தி ஏராளமானோரை கொன்று குவித்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 200-க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் குழுவினர் கடத்தி சென்றனர். 

இந்த தாக்குதலை தொடர்ந்து இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ளது. காசாவில் தரைவழி தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி உள்ளதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும், காசாவின் மிகப் பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா மருத்துவமனையை இஸ்ரேல் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். இதன் காரணமாக அல்-ஷிபா மருத்துவமனையில் இருந்த பெரும்பாலானோர் வெளியேறி விட்டனர். மேலும், அல்ஷிபா மருத்துவமனையில் சுரங்கப்பாதை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மருத்துவமனைகளில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருப்பதாக கூறும் குற்றச்சாட்டிற்கு வலு சேர்க்கும் வகையில் இஸ்ரேல் பாதுகாப்பு படை டுவிட்டர் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபரை ஆயுதம் ஏந்திய சிலர் மருத்துவமனைக்குள் கொண்டு வருவதும், ஒருவரை ஸ்டிரெச்சரில் கொண்டு வருவதும் பதிவாகியிருக்கிறது.

காசா நகரில் உள்ள அல் ஷிபா மருத்துவமனைக்கு பணயக் கைதிகள் கொண்டு வரப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை பதிவிட்டுள்ளது. 

நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும்  தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவர் என இஸ்ரேலிய பகுதியில் இருந்து கடத்தப்பட்டவர்களை ஆயுதம் ஏந்திய ஹமாஸ் பயங்கரவாதிகள் கொண்டு வந்துள்ளனர். பணயக் கைதிகளில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனை படுக்கையில் கொண்டு செல்லப்படுகிறார். மற்றவர் நடந்து செல்கிறார்.

படுகொலை நடந்த அக்டோபர் 7-ம் தேதி, அல் ஷிபா மருத்துவமனை வளாகத்தை ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு பயங்கரவாத உள்கட்டமைப்பாக பயன்படுத்தியது என்பதை இந்த காட்சி நிரூபிக்கிறது என்று இஸ்ரேல் ராணுவம் விவரித்துள்ளது.

இந்த இரண்டு பணயக் கைதிகளையும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை, அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாது என இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து