முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெய்ப்பூர்-பெங்களூரு விமானத்தில் ஊழியருடன் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டவர் கைது

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2023      இந்தியா
Jaill 20221 01 04

Source: provided

புதுடெல்லி : ஜெய்ப்பூர்-பெங்களூரு விமானத்தில் நடுவானில் ஊழியருடன் தகராறு செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

இண்டிகோ ஏர்லைன் வெளியிட்ட அறிக்கையில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருந்து பெங்களூரு நோக்கி இண்டிகோ விமான நிறுவனத்தின் 6இ 556 என்ற எண் கொண்ட விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதில், பயணி ஒருவர் குடிபோதையில், விமான ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டார். தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தபோதும், அவருடைய அணுகுமுறையை அவர் நிறுத்தி கொள்ளவில்லை.

இதனை தொடர்ந்து, அவரை அதிகாரிகள் பிடித்து சென்றனர். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பிற பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியங்களுக்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்து உள்ளது. எனினும், அந்த நபருடைய பெயர் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் நிறுவனம் சார்பில் வெளியிடப்படவில்லை. கடந்த மாதம், நியூயார்க்கில் இருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் விமான பணிப்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டார். அவர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து