முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அமைச்சர் நீக்கம்

திங்கட்கிழமை, 27 நவம்பர் 2023      விளையாட்டு
Ranil 2023 05 02

Source: provided

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கேவை பதவி நீக்கம் செய்து அதிபர் ரணில் விக்ரமசிங்க திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் மோசமான தோல்வியை அடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகளை நீக்கம் செய்தும், வாரிய நிர்வாகத்துக்காக 7 பேர் குழுவை அமைத்தும் அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே உத்தரவு பிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் விவகாரத்தில் அந்நாட்டு அரசு தலையீட்டை அடுத்து ஐசிசி உறுப்பினா் பதவியில் இருந்து இலங்கை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்தி ஐசிசி உத்தரவிட்டது. இந்த பரபரப்பான சூழலில், இலங்கையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ரோஷன், “கிரிக்கெட்டை சரிசெய்யும் முயற்சியில் நான் கொல்லப்படலாம். அவ்வாறு நான் கொலை செய்யப்பட்டால் அதிபரும், அதிபரின் ஆலோசகருமே காரணம்.” என்று சர்ச்சை கருத்தை தெரிவித்தார். இந்நிலையில், அமைச்சரவைக் கூட்டம் முடிந்த சில நிமிடங்களில் அமைச்சர் பதவியிலிருந்து ரோஷனை நீக்கி அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

______________

இத்தாலி அணி சாம்பியன்

கிரிக்கெட்டில் உலகக்கோப்பையைப் போன்று டென்னிஸில் டேவிஸ் கோப்பை போட்டி தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை ஸ்பெயினில் இந்த தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி அணிகள் முன்னேறின. இதில் 2-0 என்ற கணக்கில் இத்தாலி அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இறுதிப்போட்டியில் இத்தாலி வீரரான ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை 6-3 6-0 என்ற கணக்கில் வீழ்த்தியதன் மூலம் கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். 1976ஆம் ஆண்டுக்கு பிறகு இத்தாலி அணி டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

______________

யஷஸ்வி ஜெய்ஸ்வால் முயற்சி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தார். அதிரடியாக விளையாடிய அவர் 25  பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். போட்டிக்கு பிறகு இது தொடர்பாக  போட்டி முடிவடைந்த பிறகு அவர் பேசியதாவது., இது எனக்கு மிகவும் சிறப்பான தருணம். நான் என்னுடைய அனைத்து விதமான ஷாட்களையும் விளையாட முயற்சி செய்தேன். பந்துவீச்சாளர்களை  அச்சமின்றி எதிர்கொண்டு ஷாட்களை விளையாடினேன். 

நான் எந்த மாதிரியான ஷாட்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்பதில் உறுதியாக இருந்தேன். கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஸ்மன் என்னை சுதந்திரமாக விளையாடக் கூறினார்கள். அணியில் அனுபவமிக்க வீரர்கள் இருக்கும்போது நான் எப்போதும் எனது திறமைகளை வளர்த்துக் கொள்வது என்பது குறித்தே சிந்திப்பேன். நான் நாள்தோறும் கற்றுக் கொண்டிருக்கிறேன். உடலுறுதியிலும், மன உறுதியிலும்  தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறேன். ஒவ்வொரு நாளும் எனது திறமைகளை வளர்த்துக் கொள்கிறேன் என்றார்.

______________

பிரதமர் வருகை: சேவாக் கருத்து

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை கைப்பற்றியது. இந்த தோல்வி, இந்திய ரசிகர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. போட்டி முடிந்ததும் விளையாட்டு மைதானத்திலேயே சில இந்திய அணி வீரர்கள் கண்ணீர் சிந்தினர். இதையடுத்து சோர்வுடன் தங்களின் ஒய்வு அறையில் இருந்த இந்திய அணியினரை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று ஆறுதல் வார்த்தைகள் கூறி உற்சாகப்படுத்தினார். மேலும், இந்திய அணியினரை டெல்லிக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி, இந்திய அணியின் ஓய்வு அறைக்கு சென்றது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரான விரேந்திர சேவாக் கூறியதாவது; வீரர்களை ஓய்வு அறையில் நாட்டின் பிரதமரே நேரில் சென்று காண்பது அபூர்வமான விஷயம். ஒரு மோசமான தோல்விக்கு பிறகு நொறுங்கிய அவர்களின் இதயங்களையும், உற்சாகத்தையும் மேலே கொண்டு வர இது அவசியம். இனி வரும் காலங்களில் பல நாடுகளில் பல போட்டிகளில் பங்கு பெற உள்ள நம் நாட்டு அணியினருக்கு பிரதமரின் வார்த்தைகள் ஊக்கமாக அமையும். இப்போது நடந்தது போல், இனி வரும் போட்டிகளில் இறுதி கட்ட தடை கற்களை தாண்டவும் இது உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

______________

விடுவிக்கப்பட்ட தமிழக வீரர்கள்

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு காலக்கெடு கொடுத்திருந்தது. அது முடிவடைந்தது.  

இதனால், ஒவ்வொரு அணியும் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், 2024-ஐபிஎல்-ல் இருந்து 3 தமிழக வீரர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து ஜெகதீசனும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து முருகன் அஸ்வினும், பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து ஷாருக் கானும் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 6 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 2 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 6 months 4 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து