முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிற்சி அர்ச்சகர் நியமன விவகாரம்: தற்போதைய நிலையே தொடர ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

புதன்கிழமை, 29 நவம்பர் 2023      தமிழகம்
Mdu-High-Court 2023-04-06

Source: provided

மதுரை : அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் பயிற்சி அர்ச்சகர் நியமிப்பதில் ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள இடைக்கால தடை பொருந்தும் என தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை, இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

திருச்செந்தூர் திருக்கோயில் சுதந்திர பரிபாலன ஸ்தலதார்கள் சபை தலைவர் வீரபாகு மூர்த்தி, இணைச் செயலாளர் ஹரிஹர சுப்பிரமணியன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களை மூத்த அர்ச்சகர்கள் கீழ் பயிற்சி அர்ச்சகர்களாக நியமிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை அடிப்படையில் திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக கோயில் செயல் அலுவலர் 28.8.2023-ல் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.

திருச்செந்தூரில் ஆகம விதிகளை முறையாக, முழுமையாக பயின்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரிசுதந்திரர்கள் உள்ளனர். இதனால் புதிய அர்ச்சகர்கள் நியமனம் தேவையற்றது. அரசின் ஒரு வருட அர்ச்சகர் பயிற்சியில் எந்த வேதத்தையும் முழுமையாக கற்க முடியாது. வேதங்களை முழுமையாக கற்க 5, 6 ஆண்டுகள் ஆகும். எனவே பயிற்சி அர்ச்சகர் நியமனம் தொடர்பான அரசாணை மற்றும் திருச்செந்தூர் கோயில் செயல் அலுவலரின் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். அதுவரை அரசாணை, அறிவிப்பாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்.' இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. தலைமை அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதிடுகையில், ''பயிற்சி அர்ச்சகர் நியமனம் தொடர்பாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஆகமம், வேதம் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே ஒரு ஆண்டுக்கு பயிற்சி அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவர். இவர்கள் மூத்த அர்ச்சகர்களிடம் பயிற்சி பெறுவர். தனிப்பட்ட முறையில் அர்ச்சகர் நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடர சுப்ரீம் கோர்ட் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. மனுதாரர்களைப் போன்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அறிவிப்பாணையில் ஆகம விதிகள் மீறல் இல்லை. நிரந்தர அர்ச்சகர் நியமனம் செய்தால் மட்டுமே வழக்கு தொடர முடியும். எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்றார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில்., இதே கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு, அதில் தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடையாணை இந்த வழக்கிற்கும் பொருந்தும். பயிற்சி அர்ச்சகர் நியமன விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும். மனு முடிக்கப்படுகிறது.'' இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து